KOLNews

எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை..! - தமிழக அரசு தரப்பில் முக்கிய தகவல்

தமிழக அரசு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், நடப்பாண்டில் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மற்றும் தேனி மருத்துவக் கல்லூரியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது .

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை உருவாக்கி வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையைத் தொடங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென சென்னை உயர்ந்திமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்டிருந்த வழக்கின் முந்தைய விசாரணைக்கு வந்தபோது , தற்காலிக இடத்தில் மாணவர் சேர்க்கைக்கு தயார் என மத்திய அரசு தெரிவித்திருந்தது . 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமரவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது . அப்போது , நடப்பாண்டில் , தேனி மருத்துவ கல்லூரி மற்றும் சிவகங்கை மருத்துவ கல்லூரிகளை , எய்ம்ஸ் மருத்துவமனை தற்காலிக மாணவர்கள் சேர்க்கைக்கு வழங்க தயாராக உள்ளதாகவும் எய்மஸ் மருத்துவ குழு ஆய்வு செய்து இதில் பொருத்தமான மருத்துவ கல்லூரியை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், எய்ம்ஸ் மருத்துவ குழுவின் அனைத்து நடவடிக்கைக்கும் தமிழக அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது .

அதன் பின், வழக்கு வரும் 16 - ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . 

English Summary

Admission of AIIMS medical students ..! - Important information on behalf of the Government of Tamil Nadu

Latest Articles

KOLNews