KOLNews

சிஏ படிப்புக்‍கான தேர்வுகள் ..! - திட்டமிட்ட தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சிஏ படிப்புக்‍கான தேர்வு தேதிகள் மாற்றப்பட்டதாக தகவல் கசிந்து வரும் நிலையில், அந்த  தகவலில் உண்மையில்லை என்றும், ஏற்கனவே அறிவிக்‍கப்பட்ட தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என்றும் இந்திய பட்டயக்‍ கணக்‍காளர் மையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதாவது, சிஏ அடிப்படைப் பாடத்திற்கான தேர்வு ஏற்கனவே திட்டமிட்டப்படி வரும் டிசம்பர் 8, 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. அத்துடன்  தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டு வருவதாகவும், உண்மையான தகவல்களுக்‍கு, தேர்வார்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே அணுக வேண்டும் என்றும் தேர்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English Summary

CA Exams as per scheduled dates

Latest Articles

KOLNews