KOLNews

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ..! - டாக்டர்கள் ரவீந்திரநாத் முக்கிய கோரிக்கை

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதை , தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டுமெனகோரிக்கை விடுத்துள்ளார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , 

"மருத்துவ மாணவர்கள் தங்களது பயிற்சி காலத்திலேயே 3 மாதம் மாவட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. இது அப்பட்டமான ஆட்குறைப்பு வேலை, இதன் மூலம் இளம் மருத்துவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது, ஆகவே இதனை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது, இதனை தமிழ் நாடு முதல்வரும் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றோம்", என்றார்   

மேலும், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு அந்தந்த மாநிலங்களில் நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார் . 

English Summary

Consultation for postgraduate medical studies ..! - Dr. Rabindranath's main request

Latest Articles

KOLNews