KOLNews

ஒரே நாளில் 21 ஆயிரமா..? - தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா

தமிழகத்தில் ஒரே நாளில் 20 ஆயிரத்து 911 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 25 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 911 பேருக்‍கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன்  25 பேர் கொரோனாவுக்‍கு உயிரிழந்ததாகவும் . 6,235 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் குறிப்பாக சென்னையில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 218 பேர் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். அதே போல செங்கல்பட்டில் 2030 பேரும், கோவையில் 1162 பேரும், திருவள்ளூரில் 901 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒமைக்‍ரான் தொற்றுக்‍கு இதுவரை 231 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

English Summary

21 thousand in one day ..? - Corona accelerating in Tamil Nadu

Latest Articles

KOLNews