பிரபல தேயிலை தூள் விளம்பரம் ஒன்றில், அதிமதுரம் , அஸ்வகந்தா போன்றவற்றை அந்த தூளில் சேர்த்துள்ளதாக சொல்லப்படும். அதில் அஸ்வகந்தா என்பது தமிழர்கள் பாரம்பரியமாக தங்களது மருத்துவத்தில் பயன்படுத்திவைத்த 'அமுக்கரா' தான் என்பது பலருக்கு தெரியாது.
ஏராளமான பயன்களை தரும் அமுக்குராவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பாப்போம்..
அமுக்கராவை பாலில் வேக வைத்து, பிறகு காய வைத்து, பொடி செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் பொடியை தினமும் காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைபாடுகள் தீரும்.
அமுக்குரா, பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, அக்ரகாரம், தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் இரவில் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறவில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அமுக்குரா, நெருஞ்சி, கோரைக் கிழங்கு தலா 100 கிராம் எடுத்து, அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு பாலில் கலந்து குடித்துவந்தால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
அதே போல, அமுக்கரா பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும். அமுக்காரா, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை, ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை கால் மூட்டு, இடுப்பு ,தொடை வலி போன்றவை குணமாகும்.

அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மிட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை பருப்பு வேகவைத்த தண்ணீரில் குழைத்து பற்று போட்டால். பெண்களின் தளர்ந்த மார்பகங்கள் எடுப்பாகும்.
English Summary
Amukkara ..! - So many benefits ..?