KOLNews

வேலியோர 'பிரண்டை'யில் இத்தனை பயன்களா..?

'பிரண்டை' என்றதுமே பலருக்கு அதன் துவையல் தான் ஞாபகம் வரும். உண்மையில் பிரண்டையில் கால்சியம் , பாஸ்பரஸ் , இரும்புச்சத்து , நார்ச்சத்துட புரதம் , வைட்டமின் சி , அமிரோன் , அமைரின் , சிட்டோசிரால் , கரோட்டின் , குவாட்ராங்குலாரின் - ஏ . குவர்சிடின் போன்ற ஏராளமான சத்துக்கள் இருப்பதால் துவையல் மட்டுமின்றி அதனை எதோ ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொள்வது நம் ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.

Pirandai Thuvaiyal Recipe, How to Clean Pirandai in Tamil?

இவை தவிர பிரண்டையின் வேறு நன்மைகள் நாம் அன்பவிக்க அவற்றை குறித்து தெரிந்து கொள்வோம்.

பிரண்டையை பயன்படுத்தும்போது அதன் இளம் இலைகள் , தண்டுகளை நல்லெண்ணெய் ஊற்றி நன்கு வதக்கி பயன்படுத்த வேண்டும் .

Dyspepsia, Difficult Digestion - by Dr. K S Soma Sekhar Rao, Gastro

 பிரண்டை பசியைத் தூண்டுவதுடன், வயிற்றின் செரிமான சக்தியை அதிகரிக்கும் . ரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்புகளைக் கரைக்கும் . அத்துடன், நமது உடலை வஜ்ரம் போல் பாதுகாப்பதால் இதற்கு ' வஜ்ரவல்லி ' என்ற பெயரும் உள்ளது .குறிப்பாக விபத்துகளால் முறிந்த எலும்புகளை கூட ஒட்ட வைக்கும் சக்தி பிரண்டையில் உள்ளது .

Palmetto Bone & Joint | LinkedIn

மேலும், வீக்கம் , சுளுக்கு , பிடிப்பு போன்றவற்றுக்கு பிரண்டை சிறந்த மருந்தாக உள்ளது.  வாரம் இரு முறை பிரண்டையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்பு அடர்த்தி குறைவு நோயின் தாக்கத்தைத் தவிர்க்கலாம் .

அதே போல, இதனை துவையல் செய்து சாப்பீடுவதன் மூலம் சர்க்கரை நோய் , குடல் புண் , மூல நோய் போன்றவை குணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

English Summary

Are there so many uses for fence near 'Veld grape ' ..?

Latest Articles

KOLNews