KOLNews

கொத்துமல்லி கீரை...! - வெறும் வாசத்திற்காக மட்டுமல்ல..

கொத்துமல்லி கீரையை சமையலின் முடிவில், உணவை பரிமாறும் முன், அதன் மீது தூவி, ஒரு அலங்கார பொருளாகவும், சமையலின் வாசத்தை மேம்படுத்தவும் சிலர் உபயோகிக்கின்றனர்.ஆனால் அதை இன்னும் சரியான முறையில் பயன்படுத்தினால் மருத்துவரை ஆணுக்கு வேண்டிய தேவை இல்லாத வகையில், நமக்கு வரக்கூடிய பல உபாதைகளை சரி செய்துவிடும்.

Indian Creamy Spinach (Palak Paneer without the Paneer) - The ...

கொத்துமல்லி கீரையை துவையல் செய்து சாப்பிட்டால், பசி, ருசி உண்டாகும்.கண் பார்வைக்கும் நல்லது. சாராயம் குடிப்பதால் ஏற்படும் ஈரல் பாதிப்பு குறையும். இது வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது. வயிற்றுவலி, உப்புசம், அஜீரணம் போக்கும். 

இதன் விதைகளின் கசாயம் பித்தத்தைப் போக்கும். குடல் பூச்சிகளை வெளியேற்றும். குளிர்ச்சிதரும்., சிறுநீர் போக்கை தூண்டும். மலச்சிக்கல் அகலும். இத்துடன் சித்தரத்தை,  அதிமதுரம், சுக்கு, ஏலம் சேர்த்து காய்ச்சி வடித்த கஷாயத்தை, பாலுடன் சேர்த்து பருகினால் இருமல் சளி நீங்கும்.,வாயு பிரியும், தாகம் தணியும்'

கொத்தமல்லி இலை தழைகளை பசும்பால் விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசி வந்தால் 30 நாட்களில் தேமல் மறைந்து விடும். கொத்தமல்லி காபி குடித்தால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேராது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Coriander Spinach ...! - Not just for smell ..

Latest Articles

KOLNews