KOLNews

தொடர்ச்சியாக பூஸ்டர் டோஸ் போட்டாலும் நீடித்த பலன் கிடைக்காது..?

ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு , ஒருவர், குறுகிய கால இடைவெளியில் தொடர்ச்சியாக தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டாலும் கொரோனாவுக்கு எதிரான நீடித்த பலனை பெற முடியாது என்று தெரிவித்துள்ளது.

3 அலையை தாண்டி 4காவத் அலையை எதிர்நோக்கும் சில வளர்ந்த நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நீண்ட நாட்களுக்‍கு முன்பே தொடங்கிவிட்டது. இந்தியாவில் இப்பணி நேற்று முன்தினம் ஆரம்பமானது. நாடு முழுவதும், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதைக் கடந்தோர், இணைநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு முதற்கட்டமாக பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. அத்துடன், முதல் நாளிலேயே 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்‍கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்‍ மாண்டவியா தெரிவித்தார். 

இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக குறுகிய கால இடைவெளியில் தொடர்ச்சியாக தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வது கொரோனாவுக்கு எதிரான நீடித்த பலனை அளிக்காது என்று ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. தவிர, சரியான கால இடைவெளியின்றி தடுப்பூசி போடுவது, நோய் எதிர்ப்பாற்றலை மந்தப்படுத்தும் என்றும், பொது மக்களிடையே தடுப்பூசி மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

English Summary

Do not get long term benefit even after continuous booster dose ?

Latest Articles

KOLNews