KOLNews

தெரியுமா..? - இப்படி 'இருமுறை' செய்தால் 120 வயது வரை வாழலாம்..!

நம் ஆரோக்கியத்திற்கு கடைபிடிக்க வேண்டிய 'இருமுறை' எனப்படும் வாழ்க்கை முறை குறித்து இன்றைய தலைமுறையினருக்கு பெரிதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த  'இருமுறை'யை நடைமுறை மிக சரியாக கடைபிடித்தால் , 120 வயது வரை கூட ஆரோக்கியமாக வாழமுடியும் என சொல்லப்படுகிறது.

இருமுறை...

நாளும் கடைபிடிக்க வேண்டியவை, அதாவது நாளில் இருவேளை , வாரத்தில் இருவேளை, மாதத்தில் இருவேளை, வருடத்தில் இருவேளை கொள்வதே உத்தமம் என்று இந்தநான்கு வரியில் ஆரோக்கியத்தை பேணும் வழியை நம் முன்னோர்கள் வகைப்படுத்தி உள்ளனர்.

Image result for going to toiletமனிதன் சாப்பிடும் மூன்று வேளை உணவில், அவனுக்கு இரு வேளை மலம் கழிக்கும் நிலை உண்டாகும்.இதுவே நாளில் இருவேளை என்பது. 

வாரம் இருமுறை...

இப்படி வெளியேறும் மலத்தால் , உடல் உள் உறுப்பிலும் , மனதிலும் உருவாகும் அழுக்கை வெளியேற்றம் செய்ய வாரம் இருமுறை எண்ணெய் குளியல் குளிக்க வேண்டும். 'சனி நீராடு' என்பது பழமொழி . சனிநீர் என்றால் கொதிக்க வாய்த்த நீர்.

Related image

ஓடுகின்ற தண்ணீர், கருமை நிறம் கொண்ட நீர் ஆகியவற்றை கொண்டு இந்த குளியலில் இடுபட வேண்டும். இதை தவிர்த்து கிணற்று நீரிலோ, அல்லது தேங்கிய நீராகிய ஏரி நீரிலோ குளிக்க கூடாது. அப்படி செய்தால் ஒவ்வாமை (அலர்ஜி) வரும் வாய்ப்பு உண்டாம்.

மாதத்தில் இருமுறை..  

Image result for romance in bed

நாம் உண்ணும் உணவு என்பது முதல் நாள் அன்னரசமாகவும், இரண்டாம் நாள் சென்னீராகவும் (இரத்தம்), மூன்றாம் நாள் தசையாகவும், நான்காம் நாள் கொழுப்பாகவும், ஐந்தாம் நாள் எலும்பாகவும், ஆறாம் நாள் மூளையாகவும், ஏழாம் நாள் சுக்கில சுரோணிதமாகவும் மாறும் என்பதை உணர்ந்து இன்று உண்ட உணவில் ஏழாம் நாள் சுக்கிமாவதால் சுக்கிலமான ஏழு நாள் விட்டு, ஆக பதினான்காவது நாளில் சுக்கிலம் (விந்து) முதிர்ச்சி அடைந்து வெளிப்படும் நேரத்தில் ஒருவன் பெண்ணுடன் உடலுறவு கொண்டால் உடல் ரீதியாக பலவீனமும், உயிர் குன்றும் நிலையோ வராது என்பதை உணர்த்த மாதத்தில் இரண்டு முறையே உடலுறவு கொள்ள வேண்டும் என்றனர்.

வருடத்தில் இருமுறை என்பது ஆறுமாதத்திற்கு ஒரு முறை உமிழ்நீர், போதக நீர், இரைப்பை நீர், கல்லீரல் நீர், கணைய நீர், சிறுகுடல் நீர், பெருங்குடல் நீர், குதப்பை நீர், சீறுநீர்பை நீர், போன்ற நீர்களை பிரிக்கும் கண்மயேந்த்ரங்கள் தாங்கள் பிரித்து எடுக்கும் நீரால் உப்பு, மாவு, சர்க்கரை, பசை, சளி ஆகியவற்றை சிறுக சிறுக சேர்ப்பதால் அவையே அழுக்காக மாறி உடலுக்குத் தேவையான மேற்கூறிய சத்துக்களை பிரித்து எடுக்க முடியாமல் செயல்பாடு நிற்கும் நேரத்தில் அதை சுத்தம் செய்ய இரண்டு முறை வாந்தியும், ஐந்து முறை பேதியும் செய்தால், இந்த உடல் உறுப்புகளின் செயல்பாடும், நீரின் செயல்பாடும், கூடாமலும், குறையாமலும் இருக்கும்.

மேற்கண்ட முறையை பின்பற்றி 120 வயது வரை வாழும் கலையை சித்தர்கள் நமக்கு போதித்துள்ளார்கள். அதை இன்றும் கடைபிடிப்பது சாத்தியமே..! 

உங்களுக்கு சந்தேகம் இருப்பின் இதை இருமுறை வாசியுங்கள்.

 

 

 

English Summary

.. Do you know? - If you do 'twice', live up to 120 years old!

Latest Articles

KOLNews