இலுப்பை பழம் -

இந்தப் பழம் மற்ற பழங்களை போல மக்களால் விரும்பி சாப்பிட படவதில்லை. ஆனால், அதிக மருத்துவ குணம் கொண்டது இப்பழம் என்பது தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்.
இதை உட்கொள்வதால், .வயிற்றுப்பூச்சி நீங்கும், மலத்தை அகற்றும். உலர்த்தப்பட்ட மலர்களின் சூடான ஒத்தடம் விரைவில் உடல்வலியை குணப்படுத்தும். இதன் கசாயம் சளி, இருமலை தடுக்கும் .
இதன் பூக்களை பாலில் காய்ச்சி அருந்தி வர, மலட்டுத்தன்மை நீங்கும், தாய்ப்பால் அதிகரிக்கும்.
இலுப்பை எண்ணெய் -

இலுப்பை எண்ணெய் மற்ற எண்ணெய்களைப் போல சமையலுக்கு பயன்படுத்தலாம். தோல்நோய் போக்கும். விளக்கு எரிக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும்..
இலுப்பை பூ -

ஒரு இலுப்பை மரத்தில் 100 கிலோ கிராம் பூ பூக்கும். இது தின்பதற்கு சுவையாக இருக்கும். இதில் அறுபது சதவீத சர்க்கரை உள்ளது. அதனால்தான் 'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. என்று சொல்லப்படுகிறது.
English Summary
Do you know why, 'Iluppai flower' act as Sugar for a city without a factory ..?