KOLNews

ஏகப்பட்ட பயன்களை தரும் ..எள்ளு..!

எள் .இதிலிருந்து எண்ணெய் தயாரிக்கலாம், திவச சடங்களுக்கு பயன்படுத்தலாம், என்கிற புரிதல் மட்டுமே கொண்ட பலர் இருக்கிறார்கள். ஆனால், இதனை வட நாட்டினர் அதிகம் பயன்படுத்துவதன் காரணமே , அதில் உள்ள ஏகப்பட்ட பயன்கள் தான். 

தயாரிக்கப்படும் எள் எண்ணெயுடன்,  சம அளவு சுண்ணாம்பு நீர் கலந்து,  வெந்த புண் , நீராவிக் கொப்புளம் , சீழ்ப்புண்களுக்கு மேல் பூச்சு மருந்தாகத் தடவலாம் . கற்பூரம் , சந்தன எண்ணெயுடன் கலந்து தலைவலிக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் .

 எள் விதைகளைக் கருப்பட்டியுடன் சேர்த்து இடித்து சாப்பிட மாதவிடாய் துரிதமாகும் , வலி போக்கும் , சிறுநீர் பெருக்கும் , கட்டி வீக்கத்தை இளக்கும் . இருப்பினும், அளவோடு சேர்க்க வேண்டும் .

எண்ணெய் வகைகள் பலவற்றிலும் நல்லது  எள் நெய் ஆகும் . சிறுநீரகப் பாதிப்புகளைக் குணமாக்கும் . கண் , தோல் நோய்கள் விலகும் . கொலாஸ்ட்ரலைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும் . நெய்க்குப் பதிலாக உணவில் சேர்த்து சாப்பிடலாம் . இது கபம் , வாதம் இவற்றை நீக்கும் .

குறிப்பாக குளுமை காரணமாக உடல் சில்லிட்டு போகும் நிலையில், மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் எள் எண்ணெயை சூடாக்கி அனல் பறக்க குதி கால் மற்றும் உள்ளங்கையில்  தேய்க்க வேண்டும். அதே போல் காய்,கால்கள் முழுவதும் தேய்க்கலாம். இதனால் உடலில் உஷ்ணம் ஏற்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும். 

English Summary

Gives unique benefits..sesame ..!

Latest Articles

KOLNews