KOLNews

கர்ப்பப்பை கோளாறு நீங்க ..இதோ சில எளிய தீர்வுகள்..!

குழைந்தை பிறப்புக்கு மட்டுமல்லாமல், பெண்களின் பொதுவான ஆரோக்கியத்திற்கும் கர்ப்பப்பை என கருப்பை வலுவாக இருத்தல் வேண்டும்.  பல நேரங்களில் சிறு சிறு உபாதைகளை கவனிக்காமல் விட்டு, பின், கருப்பையை நீக்கி விடும் போக்கு சமூகத்தில் அதிகமாகி வருகிறது.

இதனால் 40வயதை கடந்த பெண்களின் உடல் வலிமை குறைவதாக, பல பெண்களின் அனுபவம் உணர்த்துகிறது. ஆகவே ஆரம்பத்திலேயே  கருப்பையில் உள்ள கோளாறு நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.. 

1. கருப்பைக் கோளாறு உள்ளவர்கள் முருங்கைக்காயைச் சமைத்து சாப்பிட்டு வர பலம் பெறுவர் . 

2. சிறுநீர் எரிச்சல் தீர விளாமரத்தின் பிசினை எடுத்து குடிதண்ணீரில் கரைத்து தெளிய வைத்துக் குடித்தால் சிறுநீர் எரிச்சல் நீங்கும் .

 3. மாதவிடாய் தள்ளிக்கொண்டே போகும் பழுக்க ஆரம்பித்த பப்பாளிப் பழத்தை தொடர்ந்து தினம் 200 கிராம் அளவு சாப்பிட்டு வர குணமாகும் .

4. குன்றிமணி இலையைச் சுத்தம் செய்து அதனுடன் சம அளவு என்ளுடன் வெல்லம் சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு சாப்பிட மாத விலக்கு ஆகும் . இரத்தப்போக்கு அதிகம் ஏற்படின் பச்சை வாழைக்காயை தோல் நீக்கி சிறு சிறு துண்டாக அரிந்து சாப்பிட இரத்தப் போக்கு சமப்படும் . 

English Summary

Here are some simple solutions to get rid of ovarian dysfunction ..!

Latest Articles

KOLNews