KOLNews

உள்ளங்கால் எரிச்சலா ..? - கவலை வேண்டாம்..இதை செய்தாலே போதும்..!

உள்ளங்கால் எரியும் உணர்வு வந்து அல்லல்படுவோர் சிலர் ஆங்கில மருந்துக்கடைக்கு சென்று எதோ ஒரு சில களிம்புகளை (ointments)  வாங்கி தடவி பார்ப்பதுண்டு..

ஆனால் இதற்கு சிறப்பான மருந்தை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். 

இதில் 2 வகை மருந்து உண்டு...

மருந்து 1..

Related imageவெந்தயம் (20 கிராம்), மற்றும் சோற்றுக்கற்றாழை (30 கிராம்) இரண்டையும் எடுத்து கொள்ளுங்கள். அதில் வெந்தயத்தை 2 மணி நேரம் ஊறவைத்து மை போல் அரைத்து கொள்ளவும்.

சோற்றுக்கற்றாழைச் சோற்றை மட்டும் குறிப்பிட்ட அளவில் எடுத்து இரண்டையும் நன்கு பிசைந்து கொள்ளவும்.

இரவு படுக்குமுன் இரண்டு கால்களிலும் கனமாக தடவி , சிறிது நேரம் காய விடவும்.

தொடர்ந்து 8 நாட்கள் செய்துவர உள்ளங்கால் எரிச்சல் நீங்கும்.

மருந்து 2...

Image result for sotru katralai, nellikai

சோற்றுக்கற்றாழை (50 கிராம்) மற்றும் நெல்லிக்காய் (50 கிராம்) இரண்டையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில் நெல்லிக்காயை விதை நீக்கி அரைத்து கொண்டு, தேவையான அளவு சோற்றுக்கற்றாழையுடன் சேர்ந்து பிசைந்து கொள்ளவும். 

இரவு படுக்குமுன் இரண்டு கால்களிலும் கனமாக தடவி காய விடவும். தொடர்ந்து 8 நாட்களுக்கு பயன்படுத்தி நிவாரணம் பெறவும்.

பி.கு. - இந்த மருந்தை மொத்தமாக ஒரே நாளில் தயாரித்து உபயோகிக்க கூடாது. அன்றாடம் தயாரித்தே உபயோகிக்க வேண்டும்.

English Summary

Is the feet burning ..? - Don't worry .. Just do it ..!

Latest Articles

KOLNews