KOLNews

நீர் குறி மருத்துவம் - இது ஒளவை பாட்டி வைத்தியம்..!

வைத்திய முறைகளில் நீர் ஒரு பெரும் பங்கு ஆற்றுகிறது. 

நீரை கருக்கி , மோரை பெருக்கி , நெய்யை உருக்கிக் கொள்வதே உத்தமம் என்று அவ்வையின் முதுமொழிக்கேற்ப தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி பிறகு தான், பருகுவதாக இருந்தாலும் பயன்படுத்து வதாக இருந்தாலும் செய்யப்பட வேண்டும் . இதனை முதல் முதலாக விளக்கியது  ஒளவை மூதாட்டியே ஆகும் . 

மோரை அதிகமாக தண்ணீர் ஊற்றி அந்த மோரில் உள்ள முழுகொழுப்பையும் (வெண்ணை ) பிரித்து எடுத்த பிறகே குடிக்க வேண்டும் அல்லது உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் . அப்படி சேர்த்துக் கொள்வதால், மோரினால் ரத்தத்தில் உள்ள சிகப்பு வாணத்திற்கு தேவையான குடல் நீரை அதிகப்படுத்த உதவுவது மோர் என்பதால், அதில் யூலை கொழுப்பு ஜீரணத்தில் மந்தம் ஏற்படும் என்பதால் குடல்நீர் சேகரிக்கும் மோரில் கொழுப்பு சத்து இருக்க கூடாது என்பதை முதல் முதலாக ஆய்வு செய்தது,ஒளவையே ஆகும் . Palaya Soru - Picture of La Woods Hotel, Chennai (Madras) - Tripadvisor

நெய்யில் கொழுப்பு சக்தி மிகுதியாக உள்ளதால் அக்கொழுப்பைக் கொதிக்க வைத்து அப்படி கொதிக்க வைத்த கொழுப்பில் முருங்கைக் கீரையைப் போட்டு கொழுப்பைப் பிரித்து நெய்யாக்கிய பிறகே உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் . அப்படி சேர்த்துக் கொள்வதால் உணவில் உள்ள மாவைப் பிரித்து ஊட்டச்சத்தைப் பிரித்து உணவால் ஊட்டசத்து உண்டு என்று உணர்த்தியவர் தமிழ் மூதாட்டியே ஆகும் . 

முதல் முதல் உலகத்தில் அணு உண்டு என்பதை உணர்த்தியதும் இந்த மூதாட்டிதான் உதாரணம் . " அணுவை துளைத்து ஏழு கடலையும் புகுத்தி குறுக தரித்த குறள் " . என்ற முதல் தமிழ் விஞ்ஞானியாகும் . மேற்சொன்ன நீரிலும் , மோரிலும் , நெய்யிலும் , ஆராய்ந்து சொன்ன மெய்ஞானியாகும் . எனவேதான் தமிழில் உணவானது மருந்தாகவும் , மருந்தானது உணவாகவும் கூறுகின்றோம் .

SHOCKING: Unbelievable Health Benefits Of Left-Over Rice

 உதாரணம் தமிழ் உணவுப்படி காலை உணவாக நீர் ஆகாரம் உண்ட பின்பே மற்ற உணவுகள் உண்ணுவதே வழக்கம் . அந்த இந்த நீர் ஆகாரத்தின் பெயர் நிசித் தண்ணீர் என்று பெயர் . நிசித் தண்ணீர் இந்த நிசித் தண்ணீர் என்பது எப்படி உருவாகிறது என்றால், ஒரு பாத்திரத்தில் இரவு உணவை ஆற வைத்து பின்பு ஒரு பாத்திரத்தில் கால் அளவு உணவும் தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி இப்படி ஆறவைத்த தண்ணீரை கால அளவு ஊற்றி பாத்திரத்தை பாதி அளவு காலியாக வைத்து மேல் பாத்திரம் மூடி இரவு முழுவதும் வைக்கிறோம்.. இப்படிதான் நிசித் தண்ணீர் உருவாகிறது . 

இவ்விகிதப்படி செய்யாமல் பாத்திரத்தில் தண்ணீர் கூடினாலோ பாத்திரத்தின் வெற்றிடம் கூடினாலோ குறைந்தாலோ பிராணக் வாயுவானது அதற்கேற்றாற் போல் கிடைக்கும் , நிசி என்றால் தூக்கம் என்று பொருள் . தூக்கத்தில் கிடைக்கப்படுவது பிராண காற்று அந்த பிராணக் காற்று எப்படி கிடைக்கிறது என்றால் ஒரு மனிதன் இரவு முழுவதும் தூங்குவதால் சோம்பல் உண்டாகும் . எனவே இரண்டு ஜாமம் தூங்குவதற்கு என்று உள்ளது . ஒரு ஜாமம் என்பது மூன்று மணி நேரம் ஆகும் . இரண்டாம் ஜாமம் முதல் மூன்றாம் ஜாமம் வரை பிரம்ம முகூர்த்தம் ( பிராண நேரம் ( அ ) ஓசோன் நேரம் ) என்று பொருள் . அந்த உயிர் பெற்ற நேரம் என்பதால் மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு பலிக்கும் என்றனர் . 

Talking In Your Sleep? Here's What That Could Mean – Cleveland Clinicகுழந்தை முதல் பெரியவர் வரை, நோய் இல்லாதவர் முதல் நோய் உற்றவர் வரை தூங்குகின்ற நேரம் என்று தூக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நேரமாகும் . இதனாலேதான் தூங்காமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் அதிகம் இந்த நேரத்தில் ஏற்படுவதாக சொல்கிறார்கள். 

English Summary

Neerkuri Medicine - This is Avai Paati Remedy ..!

Latest Articles

KOLNews