KOLNews

வசம்பு..! - அழுத குழந்தையை சிரிக்க வைக்கும்..!

உங்கள் வயிற்றில் என்ன பிரச்னை என்று ஒருவரை கேட்டால், அவர் தனது உபாதையை, குத்துது, குடையுது, வலிக்குது, பிரட்டுது, என நோவின் அறிகுறியை சொல்லுவார்.அதனை வைத்து அவர் சொல்லும் பகுதியில் உள்ள உறுப்பில் என்ன பிரச்னை என்பதை மருத்துவர்கள் எளிதில் கண்டறிவார்கள். ஆனால் குழைந்தைகள் விஷயத்தில் அப்படி இல்லை. சொல்ல தெரியாத வயதில் அவை படும் துன்பம் பார்க்க முடியாத ஒரு காட்சி. 

பெரும்பாலும் வயிறு உபாதைக்கு உள்ளாகும் குளழந்தைகளுக்கு, கடவுளுக்கு நிகரான ஒன்றாக பார்க்கப்படுவது வசம்பு. குழந்தை பெற்றவர்கள் வீட்டில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய ஒன்று. அதன் பலன்களை பாப்போம்.

வசம்பு  கசாயம் வயிற்றுவலி , வயிற்றுபோக்கு , வயிற்று உப்பூசம் , பசியின்மை குணமாகும் . அதிமதுரத்துடன் சேர்த்து குழந்தைகளின் இருமல் வயிற்றுவலி காய்ச்சலுக்கு கொடுக்கலாம் . 

வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை நீக்கும் . வாயு கட்டிய வயிற்றுவலிக்கு வசம்பை சுட்டு சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து அடிவயிற்றில் பூச வயிற்றுவலி நீங்கும் .

வாயில் அடக்கிக் கொண்டால் பல்வலி நீங்கும் . ஜீரணத்தை தூண்டும் , முந்திரி நெய்யுடன் சேர்த்து முடக்கு வாதத்திற்கு மருந்தாகும் .

English Summary

Sweet Flag ! - Making Crying child to laugh ..!

Latest Articles

KOLNews