KOLNews

உடல் திடம் பெற ..இதை செய்து பாருங்க..!

மெலிந்த தேகம் , என்பது உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை உங்கள் மனதை உற்சாகமிழக்க செய்யும்.

இதனை சரி செய்ய, நம் வீடுகளிலும், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் எளிமையான பொருள்களையே பயன்படுத்தலாம். குறிப்பாக, அமுக்கரா, வேர்க்கடலை, உளுந்து போன்றவை உடலை சதை பிடிப்புடன் இருக்க செய்யும்.  

அமுக்கரா  அமுக்கரா சூரணத்தை , ஒரு தேக்கரண்டி அளவிற்கு காலையிலும் மாலையிலும் பாலில் கலந்து சாப்பிட வேண்டும் .

 வேர்க்கடலை : வேர்க்கடலையை வறுத்து, பனை வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவர உடல் திடன் பெறலாம்.  , 

உளுந்து : உளுந்தினால் செய்த பண்டங்களைச் சாப்பிட , உடல் தேறுவதுடன் , கருப்பை நோய்களும் தீரும் . 

உளுந்து , வேர்க்கடலை , பச்சைப்பயறு , கேழ்வரகு , கோதுமை இவற்றை முளைகட்டி பின் உலர்த்திப் பொடித்து பாலில் கலந்து சாப்பிட்டு வரலாம்.  .

ஆவாரை : ஆவாரம் பூவைப் பொடித்து , அரை தேக்கரண்டி அளவுக்கு காலையும் மாலையும் பாலில் கலந்து சாப்பிட்டால் உடல்தேறுவதுடன் பொலிவு பெறும்.

English Summary

To get fit .. Try this ..!

Latest Articles

KOLNews