நமக்கு எவ்வளவு பிடித்தமான உணவாக இருந்தாலும்,பசி உணர்வு வரவில்லை என்றால் அதனை ரசித்து உண்ண முடியாது. இதனை நீக்க கீழ்கண்ட வகையில் கைமருந்து தயாரித்து உட்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் - வெள்ளை மிளகு 80 கிராம், சுக்கு 40 கிராம், கறிவேப்பிலை 20 கிராம், புதினா 20 கிராம் ஓமம் 20 கிராம்
செய்முறை -
வெள்ளை மிளகை இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் . சுக்கை தோல் நீக்கவும் ஒரு மண் சட்டியில் போட்டு இருநூறு மி.லிட்டர் எலுமிச்சம் பழச் சாற்றை ஊற்றிக் கொதிக்க விடவும் . இறக்கிச் சாற்றை நீக்கி உலர விடவும்.
அதன் பின் பச்சைக் கறிவேப்பிலையை உருவி நிழலில் காயவைத்து இடித்துக் கொள்ளவும். பச்சைப் புதினாவை நிழலில் உயர்த்தவும். ஓமத்தை ஒரு மண் சட்டியில் போட்டு நூறு மி.லிட்டர் பாலை ஊற்றி, பால் கண்டும் அளவுக்கு எடுத்து இறக்கி ஆறவிட்டு , ஓமத்தைத் தூய நீரில் கழுவி உலர்த்தவும் , பிறகு எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு இடித்து மெல்லிய துணியில் சலித்து கண்ணாடிப் பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும் .
மருந்துண்ணும் முறை - காலைக் கடன்களை முடித்து உணவுக்கு ஒரு மணி முன் அரை தேக்கரண்டி மருந்துடன் சிறிது வெந்நீர் அருந்தவும் . பகல் உணவுக்கு ஒரு மணி முன்னும் மாலை ஆறு மணிக்குமாக முன் போல் அருந்தவும் . முறையான நேரத்தில் பசி ஏற்படும் நாள்வரை மருந்தை உட்கொண்டு வரலாம் .
English Summary
To stimulate the feeling of hunger..do it and try ..!