பத்தியம் இருக்கும் போது சாப்பிடப் கூடிய இறைச்சிகள் -
உடும்பு, உள்ளான் குருவி, காடை, கவுதாரி, மான், முயல், வெள்ளாடு, வெள்ளெலி.

இதில், மான் உட்பட சிலர் சிலவற்றைப் பிடிப்பது சட்டவிரோதம் என்பதால் அவற்றை முயற்சிக்கக்கூடாது.
மீன் வகைகள் - அய்ரை, கிழங்கான், குரவை, கெலுத்தி, சுறா, திருக்கை, நெய்மீன், வரால்.

பொதுவாக தோல் சம்பத்தப்பட்ட வியாதிகள் உள்ளவர்கள் மீன்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுவார்கள். சம்பத்தப்பட்ட மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கண்ட மீன்களை உட்கொள்வதா,வேண்டாமா ? என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.
சாப்பிடக்கூடாதவை -
அனைத்து வகைக் கிழங்குகள், பயிர்வகைகள், கடுகு, கள்ளு சாராயம், பயிற்றங்காய், பன்றிக்கறி, மொச்சைக்கொட்டை, பாகற்காய், பெருங்காயம், முற்றிய அவரை, வெங்காயம், தேங்காய் பால், இளநீர், அகத்திக்கீரை, கோழி கறி, கருவாடு, தொக்கு மாங்காய், மாதுளங்காய் இவைகளை அவசியம் தவிர்க்கவும். இல்லையெனில் மருந்து முறிந்துவிடும், பயன்தராது.

இதில் அமாவாசையன்று பத்தியம் இருக்க வேண்டிய அவசியமில்லை சில மருத்துவர்கள் கூறுவது உண்டு..
English Summary
What can be eaten .. What should not be eaten ..? - Learn