KOLNews

இஞ்சிக்கும் சுக்குக்கும் என்ன வித்தியாசம் ..?

இஞ்சிக்கும் சுக்குக்கு வேறுபாடே கேட்டால், அது எல்லோருக்கும் தெரியும், காய்ந்த இஞ்சியே சுக்கு என்று. ஆனால் இவற்றிற்கு பொதுவான பயன்களும் இருக்கிறது, வெவ்வேறான பயன்களும் இருக்கிறது. 

இஞ்சி : அஜீரணத்தைப் போக்கும் , இருமலைத் தடுக்கும் . இரத்த ஓட்டத்தைத் தூண்டும் . உடலில் வீக்கங்களைப் போக்கும் . வாந்தியுடன் கூடிய மயக்கம் மற்றும் பயணக்களைப்பை நீக்கும் . இஞ்சி சாறை உப்புடன் சேர்த்து நீர்விட்டு கலந்து உணவுக்கு முன் அருந்த ஜீரணத்தைத் தூண்டும் . தொண்டைக் கரகரப்புக்கு நல்ல மருந்தாகும் . நினைவாற்றல் பெருகும் . கல்லீரல் சுத்தமாகும் .

சுக்கு : இஞ்சியை வேகவைத்து உலர்த்தினால் சுக்கு கிடைக்கிறது . சுக்கைப் பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட உடல் அசதி தீரும்  சுக்கை நீரில் இழைத்து முகப்பரு மேல் வைத்தால் பரு அமுங்கிவிடும் . புதினா , மிளகாய் , புளி சேர்த்து அரைத்து உணவுடன் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும் . பித்தக் குமட்டல் குணமாகும் . தலைவலி , பிரசவ கால குமட்டல் , பித்தம் இவற்றால் தொல்லையா ? தினமும் காலையில் காபித்தூளுக்குப் பதிலாக சுக்குத்தூளும் , மல்லித் தூளும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சிறிதளவு சேர்த்து சுக்கு மல்லிக் காபி சாப்பிட்டால் மூக்கடைப்பு , தலைவலி , பித்தவாந்தி , குமட்டல் முதலிய நோய்கள் நீங்கும் .

English Summary

What is the difference between ginger and dried ginger ?

Latest Articles

KOLNews