KOLNews

எண்ணெய் குளியல் ஏன் அவசியம்..?

வாரத்தில் ஒரு நாளாவது எண்ணெய்  தேய்த்துக் குளித்து நோய் வராமல் தடுத்துக் கொள்வது அவசியம்.

 நம்முடைய தினசரி வேலைகளான  சிந்தித்தல், கோபம், காமம் உணர்ச்சிவசப்படுதல் ஆகியவற்றால் நம் மூளையும் நரம்பு மண்டலமும் சூடேறி விடுகின்றன.  இந்த சூட்டை தணிக்கவே எண்ணெய் தேய்த்துக் கொள்வது கட்டாயம் ஆகிறது.  இதனால் சூடு குறைந்து மன அமைதி கிடைக்கும். கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல உறக்கம் வரும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பது 'ஸ்பண்டிலிட்டிஸ்', எலும்பில் வாதம் மூட்டுவாதம் (ரூமாட்டிக் ஆர்த்தரைடீஸ்) உணர்ச்சியற்ற ஒரு பக்கவாதம், ஒற்றைத்தலைவலி, பராலிசிஸ் ஆகியவற்றிற்கு ஆகியவற்றிற்கு மிகவும் நல்லது.

Rheumatoid arthritis (RA): Symptoms, causes, and complications

வயதான காலத்தில் மூட்டுகளில் எண்ணெயின் வழவழப்புத் தன்மை தேவைப்படுகிறது எனவே எண்ணெய் தேய்த்து குளித்தல் கட்டாயம் தேவை.

 பெண்கள் வாரத்தில் ஒரு நாளாவது எண்ணெய்  தேய்த்துக் கொள்ளும் பழக்கத்தை கொண்டு வரவேண்டும் தலையை தேய்ப்பதால் மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராகும், காம உணர்வுகள். பொறாமை, கோபம் உணர்வுகள், எரிச்சல் ஆகியவை ஏற்படாது. குறிப்பாக கம்ப்யூட்டரில் பணி புரியும் பெண்கள் கம்ப்யூட்டரையே பார்த்துக்கொண்டும் யோசித்தும் பணிபுரிவதால் அவர்களை மூளை சூடாகவே இருக்கும். அதை குறைத்துக் கொள்ள அவர்கள் பல வழிகளில் முயற்சி செய்வார்கள் எல்லாவற்றையும் விட அவர்கள் வாரம் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் போதும். 

Benefits of Oil Bath(Tamil) - haja.co

 உடம்பில் எண்ணெய் வைத்து தேய்க்கும் போது கீழிருந்து மேலாக தேய்க்க வேண்டும் உடம்பில் மேலிருந்து கீழாக தேய்க்கக் கூடாது என்பது இதயத்தை நோக்கி செல்ல வேண்டும் இதனால் நல்ல பலன் கிடைக்கும். அமாவாசை தினத்தில் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. 

The Diwali cleanse: Benefits of traditional oil massage followed ...

 எண்ணை தேய்த்துக் குளித்தால் உடல் மிருதுவாகிறது. சருமத் துவாரங்களில் தங்கி உள்ள எண்ணெயை மீது சூரிய வெளிச்சம் படும் போது 'வைட்டமின் டி' உண்டாகி உடலில் சேரும். எனவே, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாளில் சீயக்காய் தூள் மட்டும் போட்டுக் குளித்தால் போதும். அதன் மேல் சோப்பு போட்டு எண்ணெயை உடலில் தங்காமல் சுத்தமாக்கி விடத் தேவையில்லை. 

எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு பகலில் தூங்கக்கூடாது.  அப்போது தளர்ந்திருக்கும் சருமத் துவாரங்களில் என்னை அழைத்துக் கொள்ளும் இதனால் வியர்வை வெளியில் வராமல் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. எனவே எண்ணெய் தேய்த்து குளித்த அன்று பகல் தூக்கம் கூடாது.

English Summary

Why is an oil bath necessary?

Latest Articles

KOLNews