KOLNews

101 இராணுவ தளவாட பொருட்களுக்கு இறக்குமதி தடை .! - மத்திய அரசு அதிரடி

ராணுவத்துக்குத் தேவைப்படும் 101 தளவாட பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது . இந்த தகவல் பாதுகாபு துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்க் தெரிவித்துள்ளார்.

 இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரத்தின் கீழ் வரும்,  பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துவிடும் அமைப்பிற்கு புதிய வாய்ப்புகளை  ஏற்படுத்தி தரும் விதமாக  இறக்குமதி செய்யப்படும் 101 ராணுவ தளவாட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும்,  நாடு  பொருளாதார வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விடுத்த இந்த அதிரடி அறிவிப்பு , சுயசார்பு திட்டத்தின் கீழ் பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

முப்படைகளுக்கும் தேவையான 4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய தற்போது மத்திய அரசு திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற பாதுகாப்பு தளவாடங்களை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

101 Import ban on military equipments ! - Federal Government Action

Latest Articles

KOLNews