KOLNews

பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் தகவல் பகிர்ந்த 2 இந்திய ராணுவ வீரர்கள் கைது..!

நம் ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து , பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் பெண் ஏஜென்டு ஒருவருக்கு தகவல் அளித்த இரண்டு ராணுவ வீரர்கள், ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டனர்.

ரவி வர்மா, விசித்ர போஹ்ரா. இவர்கள் இருவரும் ராஜஸ்தானில், உள்ள பொக்ரானில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்கள்,

முன்னதாக  'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் மூலம், நம் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றி, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.,க்கு தகவல் கொடுப்பதாக புகார்கள் வந்ததையடுத்து, ராணுவ அதிகாரிகள், ரகசிய விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், இவர்கள் இருவரும், ஐ.எஸ்.ஐ.,யைச் சேர்ந்த பெண் ஏஜென்ட் ஒருவருக்கு, தகவல்கள் அனுப்பியது தெரியவந்தது . இதற்கிடையில், இரண்டு வீரர்களும், சொந்த ஊருக்கு, செல்லும் போது, ஜோத்பூர் ரயில் நிலையத்தில் வைத்து, உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அதன் பின், அவர்களிடம் நடத்திய விசாரணையில்,  இரு ராணுவ வீரர்களையும், 'இன்டர்நெட்' குரல் அழைப்பு வழியாக, ஐ.எஸ்.ஐ.,யின் பெண் ஏஜென்ட் தொடர்பு கொண்டுள்ளார். அந்தப் பெண் பேசியது பஞ்சாப் வட்டார மக்கள் பேசுவது போல இருந்ததால், அவர் இந்தியர் என இருவரும் நம்பி அவருடைய வலையில் சிக்கியுள்ளனர்.  

அதோடு, இருவரும், ராணுவம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். 

தற்போது உயர் ராணுவ அதிகாரிகள் பிடிபட்ட வீரர்களை, ஜெய்ப்பூருக்கு கொண்டு சென்று, தீவீரமாக விசாரித்து வருகின்றனர்.

English Summary

2 Indian soldiers arrested for sharing information with Pakistani woman spy

Latest Articles

KOLNews