KOLNews

பீகாரில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை..!

இன்று, பீகார் மாநிலத்தில் அதிரடிப்படையினருடன் நடந்த பயங்கர மோதலில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் மண்டலத் தளபதியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, அதிரடிப்படையிரனருக்கு கயா மாவட்ட தலைநகரில் இருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு  அவர்கள் விரைந்தனர், 

அப்போது நடந்த  தேடுதல் வேட்டையின்போது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு அதிரடிப்படையினரும் பதிலடி கொடுத்தனர். நள்ளிரவில் தொடங்கிய இந்த துப்பாக்கிச் சண்டை அதிகாலை வரை தொடர்ந்தது. இச்சண்டையின்போது அதிரடிப்படையின் மண்டல தளபதி அலோக் யாதவ் உயிரிழந்தார்.

அதன் பின், துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்திலிருந்து தளபதியின் உடலோடு 3 மாவோயிஸ்ட்களின் உடல்களும் மீட்கப்பட்டன. கோப்ராவின் 205 வது பட்டாலியன் இந்த துப்பாக்கிச் சண்டைக்கு தலைமை தாங்கிய தாகவும்,அவர்களுடன் அம்மாநில காவல்துறையினரும் இருந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

English Summary

3 Maoists shot dead in Bihar

Latest Articles

KOLNews