KOLNews

நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடிய மாணவி..!

அண்மையில் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் பிரியங்கா என்ற கால்நடை மருத்துவர், கொடூரமாக கற்பழித்து எரித்துக்கொல்லப்பட்டுள்ள நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது போன்ற சம்பவங்கள், தனிமனிதர்களுக்குள்ளும் பெரிய தாக்கத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி கொதித்து எழுந்துள்ள பெண் தான்  டெல்லியை சேர்ந்த அனு துபே என்ற மாணவி.

அவர் டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே வாயில் எண் 2-3 அருகே நடைபாதையில் நேற்று அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவர், “ஏன் எனது சொந்த நாட்டில் நான் பாதுகாப்பை உணர முடியவில்லை?” என எழுதப்பட்ட அட்டையை ஏந்தி இருந்தார்.

அவரது இந்த போராட்டத்தினால் , அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அவரை ஜந்தர் மந்தருக்கு சென்று போராடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். உடனே அவரை நாடாளுமன்ற வீதி போலீஸ் நிலையத்துக்கு வாகனத்தில் போலீசார் கூட்டிச்சென்றனர்.

அங்கு சிறிய விசாரணைக்கு பின் அவரை விடுவித்தனர்.

English Summary

A student struggles outside Parliament ..!

Latest Articles

KOLNews