KOLNews

மேலாடை இன்றி நடிக்கணுமாமே .! - 'எனக்கு ஒன்னும் தெரியாது' என ஷில்பா ஷெட்டி கதறல் ..!

ஆபாச பட விவகாரத்தில் இதுவரையில் , ஷில்பா ஷெட்டியின் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர் . 

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்தரா, ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக எழுந்த புகாரில் கைதாகி உள்ளது தெரிந்ததே..!

இந்நிலையில், மேலும் சில செயலிகளிலும் ஆபாச படங்களை பதிவேற்றியதில் ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்தின் அடிப்படையில் விசாரணை தொடர்வதாக தெரிகிறது. ஏற்கனவே ஆபாச பட வழக்கு தொடர்பாக 3 பேருக்கு  சம்மன் அனுப்பி உள்ள போலீசார், ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா ? என்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் அவர் தனக்கு தொடர்பு இல்லை என்று ஷில்பா ஷெட்டி மறுத்து விட்டார் என்றும்,விசாரணையின்போது ராஜ்குந்த்ராவிடம் கடும் வாக்குவாதத்தில்  ஈடுபட்ட ஷில்பா, ஆபாசப் படங்கள் தயாரிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜ்குந்தராவுக்கு தொடர்பு இல்லை என்று அழுத்தமாக நம்புவதாகக் கூறியதுடன், அது முழுக்க , முழுக்க லண்டனைச் சேர்ந்த நபரால் நிர்வகிக்கப்பட்ட செயல் என்றும் பண  முதலீடு மட்டுமே ராஜ்குந்தரா தரப்பில் செய்யப்பட்டது என்றும் கூறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

Shilpa Shetty had a fight with Raj Kundra during police interrogation, the  actress started crying bitterly amidst the statement - Connexionblogவிசாரணையின் போது போலீசார், ராஜ்குந்தரா நடத்தி வந்த வாட்ஸ் அப் குருப்பில் கிடைத்த கடிதப் பரிவர்த்தனை நகலை ஷில்பா ஷெட்டியிடமும் ராம் குந்தராவிடமும் காட்டியதாகவும்,  அந்த கடிதத்தில் , ஓடிடி படங்களில் குறிப்பிட்ட நடிகையை வைத்து படம் எடுப்பதற்கு முன்பாக , அவரை பற்றிய குறிப்புகளை தயாரிப்பு நிறுவனமான தங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் . அவரை இறுதி செய்வதில் ஹாட்ஷாட்ஸ் அணியின் முடிவே இறுதியானது . தேர்வாகும் நபர் , சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படுபவராக இருக்க வேண்டும் . துணிச்சலான காட்சிகளில் மேலாடையின்றியும் , பின்புறம் நிர்வாணமாகவும் நடிக்கக் கூடியவராக அந்த நடிகை இருக்க வேண்டும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளதையும் சுட்டி காட்டி கேள்விகளை எழுப்பியதாக சொல்லப்படுகிறது. 

ஆனால் அதற்கு ஷில்பா ஷெட்டி , இதுபோன்ற வரிகள் ஆபாசத்தை தூண்டக்கூடியவை கிடையாது , கதைக்கு தேவைப்படும் கவர்ச்சி மட்டுமே என்றும் இதை நீதிமன்றத்தில் உரிய வகையில் தங்களுடைய தரப்பு வாதிடும் என்றும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டியின் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவரை மீண்டும் விசாரிக்கப் போவதில்லை போலீசார் தரப்பில் சொல்லப்பட்டதாக தெரிகிறது. 

இதற்கிடையே, விசாரணையின் போது ஷில்பா ஷெட்டி மனம் உடைந்து கூச்சலிட்டதாகவும், இந்த விஷயம் குடும்பத்தை மோசமாக சித்தரிப்பதாகவும் , பல ஒப்பந்தங்கள் பாதிக்கப்பட்டு , தன்னை நம்பி விளம்பர ஒப்பந்தம் செய்தவர்கள் கூட பின்வாங்கி விட்டதாகவும் கணவர் .ராஜ் குந்தராவை கடுமையாக திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. 

English Summary

Act without tops.! - Shilpa Shetty screams 'I don't know anything' ..!

Latest Articles

KOLNews