டெல்லியில் 32-வது நாட்களை கடந்தும் சோர்வடையாமல் லட்சக்கணக்கான விவசாயிகள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறா கோரி போராட்டம் நடித்த வரும் நிலையில், அங்கு ,பஞ்சாபைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் போராட்டக்களத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் குளிர் இடையே தொடரும் போராட்டத்தில், உடல்நலக் குறைவு காரணமாகவும், தற்கொலை செய்தும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததால் மனமுடைந்த பஞ்சாபைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், டெல்லி போராட்டக்களத்திற்கு அருகே விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன், விவசாயிகள் போராட்டத்திற்காக தனது உயிரை தியாகம் செய்வதாகவும், பிரதமர் நரேந்திர மோதி விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துதுள்ளார். இந்த சம்பவம் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Advocate commits sudden suicide in support of farmers