KOLNews

கொரானா பரவலை தடுக்க அமிதாப் பச்சன் செய்த காரியம்.!

சீனாவில் துவங்கி உலகெங்கும் பரவும் கரோனா வைரஸ், இந்தியாவில் தன் தாக்கத்தை பெரியளவில் ஏற்படுத்தும் முன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

அந்த நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் விதமாகவும், மக்கள் அந்த செயலில் ஈடுபடுத்தி கொள்ள தன்னையே முன்னுதாரணமாக காண்பித்து உள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.

அவர் தனது கையில் முத்திரைக் குத்திக் கொண்டு தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் 

நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள தனது டிவிட்டர் பதிவில், மருத்துவப் பாதுகாப்புக்காக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் என்பதற்கான முத்திரையை தனது கையில் பதிவு செய்து கொண்டுள்ளதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

 நேற்று, தேர்தல் சமயத்தில் பயன்படுத்தப்படும் மையினால், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவர்களுக்கு, இடது கையில் இந்த முத்திரைக் குத்தும் பணியை மகாராஷ்டிர அரசு துவக்கிய நிலையில், அதற்கு தனது ஒத்துழைப்பை தரும் வகையிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமிதாப்பச்சன் இந்த செயலை செய்துள்ளார். 

அத்துடன், மும்பை மக்களே பத்திரமாக இருங்கள், எச்சரிச்சையாக இருங்கள், அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும்  தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியையும் அமிதாப் ரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Amitabh Bachchan does something to stop Corana

Latest Articles

KOLNews