KOLNews

இரவில் புத்தகம் படிப்பவரா நீங்கள் ..?

வாசிப்பு பழக்கம் குறைந்து உள்ளதாக அங்கலாய்க்கும் பலர் இருந்தாலும், வாசிப்பு பழக்கம் உடையவர்களை நம்பி தயாரிக்கப்படும் நுகர்வு சாதனைகளும் சந்தையில் விற்கத்தான் செய்கின்றன.அந்த வகையில் தற்போது அதிகம் விற்கப்படும் பொருளாக உள்ளது தோளில் மாட்டிக்கொள்ளும் மின் விளக்கு. 

பொதுவாக வீட்டில் இரவில் எவ்வளவு நேரம் டிவி பார்த்துக்கொண்டிருந்தாலும் அதையாரும் கண்டு கொள்வதில்லை . அவர்களும் உட்கார்ந்து டிவி பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள் . ஆனால் ஒருவர் இரவு நேரங்களில் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்தால் போதும்  உடனே , " லைட்டை ஆஃப் பண்ணு . நாங்க தூங்க வேண்டாமா ? " என்று குரல் கொடுப்பார்கள் .

Glocusent LED Neck Reading Light, Book Light for Reading in Bed, 3 Colors |  Buy Night Lights & Light Projectors - 3314563புத்தகங்களை வாசிப்பவர்கள் இயல்பாகவே பிறர்க்கு தொல்லையாக  இருக்கமாட்டார்கள் . இரவு நேரத்தில்  புத்தகத்தை வாசிக்கத் தொடங்கும் சிலர் நேரம் , காலம் தெரி யாமல் வாசித்துக் கொண்டே இருப்பார்கள் . அப்படிப்பட்டவர்களுக்கு உதவும்விதமாக தான் இந்த  விளக்கு வந்திருக்கிறது . தோளில் மாட்டிக் கொள்ளும் இந்த விளக்கு இரண்டு கைகளைப் போல நெஞ்சுக்கு நேரே தொங்குகிறது . இந்த விளக்கின் இருமுனைகளிலும் இருந்து புத்தசுத்தை வாசிப்பதற்குத் தேவையான வெளிச்சம் மட்டும் வருகிறது . இதை அணிந்து கொண்டு படுக்கையறையில் புத்தகத்தை வாசித்தாலும் , படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் பிறருக்கு இதனால் தொல்லை எதுவுமில்லை . இந்த விளக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் , பதினாறு மணி நேரங்கள் தொடர்ச்சியாகப் பயன்படுத்தலாம் . ஒருமுறை சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்கள் ஆகும் . புத்தகத்தின் இரண்டு பக்கங்களைப் புரட்டி யதும் உடனே குறட்டை விடுபவர்களுக்கு இந்த விளக்கினால் எந்தப் பயனும் இல்லை .

வணிக செயலிகள் மூலம் இந்த விளக்கினை வாங்கலாம், ரூ, 500லிருந்து ரூ 800 வரையிலான விலையில் கிடைக்கிறது. 

English Summary

Are you reading a book at night ..?

Latest Articles

KOLNews