KOLNews

ரூ.100க்கு பதில் ரூ.500 கொடுத்த ஏடிஎம்..! - பேராசையில் குவிந்த மக்கள்..!

கர்நாடக மாநிலதில் உள்ள மடிகேரி நகரில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் ஒன்றில் ரூ.100க்கு பதிலாக ரூ.500 வந்ததையடுத்து, அங்கு பணம் எடுக்க மக்கள் அதிகளவில் கூடிவிட்டனர்.

முன்னதாக அந்த குறிப்பிட்ட  ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்ற வாடிக்கையாளர் ஒருவர், அதில் ரூ.100 பெற முயற்சித்துள்ளார். ஒவ்வொரு  தடவையும் ரூ.100க்கு பதிலாக ரூ.500 வந்துள்ளது. இந்த தகவலை வெளியே வந்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்த, மக்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுகொண்டு பணம் எடுப்பதற்காக ஏடிஎம் முன்பு குவிந்தனர். 

அந்த வகையில் அந்த ஏடிஎம்மில் ரூ.1.7 லட்சத்தை எடுத்துள்ளனர் இதற்கிடையே இந்த தகவல் வங்கி நிர்வாகத்திற்கு தெரிந்தும் அவர்கள் பொறுமையாக நிகழ்விடத்திற்கு வந்துள்ளனர்.  அதற்குள் முடிந்தவரை பணத்தை மக்கள் எடுத்துவிட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது - 

தகவல் தெரிந்து வங்கி நிர்வாகத்திற்கு தெரிந்ததும். நிகழ்விடத்திற்கு வந்த வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அனைவரும் ஏடிஎம் இயந்திரத்தின் தவறை உணர்ந்து எடுத்த பணத்தை திருப்பி தந்துள்ளனர்.

ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை கையாளும் நிறுவனத்தின் ஊழியர்கள் செய்த தவறே இதற்கு காரணம். இயந்திரத்தின் ரூ.100 நோட்டுகளை ஏற்றும் தட்டில் ரூ.500 நோட்டுளை நிரப்பியதே இதற்கு காரணம். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் காவல்துறையை அனுகவில்லை, ஆனால் பணம் எடுத்துச் சென்ற வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம் ரூ.1.7 லட்சத்தை திரும்பப் பெற்றுள்ளதாக தெரிவித்தார். 

ஆனால்,  2 இளைஞர்கள் மட்டும் ரூ.65 ஆயிரத்துடன்  தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை பிடிப்பதற்காக, ஏடிஎம்மில் பணம் கையாளும் நிறுவனம் காவல்நிலைத்தில் புகார் அளித்ததாகவும், அந்த 2 பேரிடமும் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் வேறு வழியின்றி ரூ.65 ஆயிரத்தை திரும்ப அளித்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் குறிந்து யார் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் எடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் நிறுவனத்திடம் இருந்து மனு மட்டுமே பெறப்பட்டுள்ளது.

English Summary

ATM delivered Rs.500 instead of Rs.100 ..! - Greedy people ..!

Latest Articles

KOLNews