KOLNews

யானையிலிருந்து விழுந்த பாபா ராம்தேவ் ..!

பாபா ராம்தேவ், இவர் பதாஞ்சலி தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனராகவும், பிரதமரின் நண்பராகவும் அறியப்பட்டாலும், யோக கலையில் நிபுணர் என்பது தான் இவரின் பிரதான அடையாளம். 

இவர் உத்திர பிரதேச மாநிலத்தின்  மதுராவில், கடந்த, 11ம் தேதி ஒரு யானையின் மீது அமர்ந்து யோகாசனம் செய்யும் முயற்சில் ஈடுபட்ட போது தவறி விழுந்த, 'வீடியோ' தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மதுராவில், உள்ள தனது ஆசிரமத்தில் இருப்போருக்கு, பாபா ராம்தேவ் பல்வேறு யோகாசனங்கள் செய்வதுடன், அவற்றின் பலன்களை பற்றி விளக்கம்அளிப்பார். அந்த வகையில் ஒரு யானையின் மீது அமர்ந்து யோகாசனம் செய்தபோது, யானை அசைந்தால் திடீரென அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்; இருப்பினும்  சிரித்துக்கொண்டே எந்த காயங்களும்  இன்றி எழுந்து வந்தார் .

English Summary

Baba Ramdev falls from elephant ..!

Latest Articles

KOLNews