KOLNews

பிஷப்பின் மீதான பாலியல் குற்றசாட்டு விவகாரம்..! - வாடிகனில் புகார் செய்தார் கேரள கன்னியாஸ்திரி ..!

கேரளாவில் தனக்கு கீழ் பணியாற்றிய கேரள கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் குற்றம் சாட்டப்பட்ட பிஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரி லக்கி கலப்புரா, பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் தான் நீக்கப்பட்டதை எதிர்த்து வாடிகனில் புகார் மனு அனுப்பியுள்ளார்.

முன்னதாக பஞ்சாப் , ஜலாந்தரை சேர்ந்த , பிஷப் பிராங்கோ மூலக்கல் என்பவர் தனக்கு கீழ் பணியாற்றிய கேரள கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார் . 

அதையடுத்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லக்கி கலப்புரா என்ற கன்னியாஸ்திரி, மேலும் சில கன்னியாஸ்திரிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார்.

Image result for bishop franco mulakkal

இதற்கிடையே, லக்கி கலப்புராவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து புகார் கூறப்பட்டதையடுத்து ரோமன் கத்தோலிக்க தேவாலாயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எப்.சி.சி. எனப்படும் ‛பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட்' சபையிலிருந்து இது குறித்து விளக்கம் அளிக்கும்படி லக்கி கலப்புராவுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது. 

அதன் பின் , இதற்கு லக்கி கலப்புரா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என கூறி அவரை சபையிலிருந்து நீக்குவதாக முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதையடுத்து, சபையின் முடிவை எதிர்த்து வாடிகனில் புகார் கூறியிருந்தார் லக்கி கலப்புரா.

இது தொடர்பாக  லக்கி கலப்புரா கூறுகையில், 

தன்னை  நீக்கியது ரோமன் கத்தோலிக்க விதிமுறைகளுக்கு முரணானது என்றும், முடிவை எதிர்த்து நேற்று (ஆக.16) வாடிகனுக்கு இ.மெயில் மூலம் புகார் அனுப்பியுள்ள்ளதாகவும், .மேலும்  தபால் மூலம் கடிதமும் அனுப்பியுள்ள்ளதாகவும் .தவிர சட்ட போராட்டம் மூலம் இந்த விவகாரத்தை சந்திக்க தயாராக உள்ளதாவும் தெரிவித்துள்ளார்.

English Summary

Bishop's Sexual Assault Issue ..! Kerala nun complains in Vatican

Latest Articles

KOLNews