KOLNews

பா.ஜ.க. கவுன்சிலர் சுட்டுக்கொலை..! - ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு ..!

ஜம்மு காஷ்மீரில் பாஜ.க. கவுன்சிவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட தால் அங்கு  பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று இரவு 10 மணி அளவில் ,  பல்வாமா மாவட்டம் டிரால் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. கவுன்சிலர் ராகேஷ் பண்டிதா என்பவர் தனது நண்பரை பார்க்க சென்றுள்ளார் . அப்போது அவரை வழிமறித்த 3 மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் . இதில் பலத்த காயமடைந்த ராகேஷ் , சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . 

மேலும், இந்த சம்பவத்தில் அவரது நண்பரின் மகள் படுகாயமடைந்துள்ளார் . பாஜ.க. கவுன்சிலர்  ராகேஷ் பண்டிதாவின் பாதுகாப்புக்கு இரு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் , சம்பவத்தின்போது அவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி தனியாக சென்றதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பா.ஜ.க கவுன்சிலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நம்மு காஷ்மீர துணைநிலை ஆருதர  மனோஜ சின்ஹா மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

English Summary

BJP Councilor shot dead ..! - Tensions in Jammu and Kashmir ..!

Latest Articles

KOLNews