KOLNews

உலக அளவில் லஞ்சம் ..! - பட்டியலில்...நமக்கு முன்பு 76 நாடுகள்..!

அரசாங்கத்துடனான தொழில் தொடர்புகள், லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கல், அரசு மற்றும் சிவில் சேவை வெளிப்படைத்தன்மை, ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் சிவில் சமூக மேற்பார்வை திறன் , என 4 காரணிகளை  அளவுகோலை வைத்து அமெரிக்காவின்  லஞ்ச ஒழிப்பு அமைப்பான டிரேஸ் லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில்,  இந்தியா உள்ளிட்ட 194 நாடுகளில் தொழில்களில் நிலவும் லஞ்சம் தொடர்பாக மதிப்பிட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான பட்டியலில்,  இந்தியா 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 48 புள்ளிகளுடன் 78-வது இடத்தில் இந்தியா இருந்தது.

இந்த பட்டியலின் படி, வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தென்சூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகியவை தொழில் ரீதியிலான லஞ்ச ஆபத்து அதிகமாக இருப்பதாகவும், லஞ்சம் குறைவாக உள்ள நாடுகலின் பட்டியலில் உள்ளவையாக டென்மார்க், நார்வே, சுவீடன் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளும் இடம்பெறுகின்றன.

இந்தியை பொறுத்தவரை, தன் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்காளதேசம் ஆகிய வற்றைவிட நல்ல நிலையில் உள்ளது. ஆனால் பூடான் 37 புள்ளிகளுடன் 48-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சீனா, தனது அதிகார வர்க்கத்தை தொடர்ந்து ஒழுங்குபடுத்துவதின் மூலம் அரசு அதிகாரிகளின் லஞ்ச கோரிக்கை வாய்ப்புகளை குறைத்துள்ளது என டிரேஸ் லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது கவனிக்கதக்கது. 

English Summary

Bribery on a global scale ..! - In the list ... 76 countries before us ..!

Latest Articles

KOLNews