KOLNews

நாடெங்கும் கார் பேட்டரிகள் சார்ஜ் செய்யும் நிலையங்கள்..? - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

நேற்று, தலைநகர் தில்லியில் சிஐஐ என சொல்லப்படும் இந்திய தொழிலக கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில்  தன்னிறைவு என்ற தலைப்பிலான மாநாடு மற்றும் கண்காட்சியில்  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.

அங்கு அவர் பேசுகையில்,  இந்தியாவின் உச்சபட்ச இலக்கு, வாகனங்களை 100 சதவீத எத்தனால் பயன்பாட்டில் இயக்குவது தான் என்றும் . அந்த வகையில் , வரும் 2023-24ஆம் ஆண்டில் பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலை கலப்பதற்கான இலக்கு எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

Tata Power: Tata Power to install 100 EV charging stations in Maharashtra,  Auto News, ET Auto

அத்துடன்,  மின்சார கார்களை பயன்படுத்துபவர்கள் , அந்தக் கார்க பேட்டரிகளை  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அல்லது சூரியசக்தி மூலம் சார்ஜ் செய்வதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு ஏதுவாக நாடு முழுவதும் வாகனங்களுக்கான எரிவாயு நிரப்பும் நிலையங்களில் , கார் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கான நிலையங்களை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்தியா ஒட்டுமொத்தமாக வரும் 2022 - இல் 175 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யவும் , வரும் 2030 - இல் 450 ஜிகா வாட் அளவுக்கு உற்பத்தி செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக  பியூஷ் கோயல் கூறினார்

English Summary

Car batteries charging stations all over the country ..? - Information from Union Minister Pius Goyal

Latest Articles

KOLNews