அகில இந்திய டாக்சி யூனியன், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால், வரும் 3-ம் தேதி முதல் நாடு முழுவதும் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடபடப்போவதாக அறிவித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு பிரதமர், உள்துறை அமைச்சர், வேளாண் அமைச்சர் உள்ளிட்டோருக்கு அகில இந்திய டாக்சி யூனியன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னதாக இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அந்த சங்கத்தின் தலைவர் பல்வந்த் சிங் புல்லா, கார்ப்பரேட் துறை நாட்டு மக்களை அழித்து வருவதாக குற்றசாட்டியதுடன், விவசாயிகளின் பிரச்சனைக்கு 2 நாட்களுக்குள் தீர்வு காணாவிட்டால், நாடு முழுவதும் வரும் 3-ம் தேதி முதல் டாக்சிகளை, சாலைகளில் இருந்து அகற்றி விடுவோம் எனத் தெரிவித்தார்.அத்துடன் டாக்சிகளை ஓட்ட வேண்டாம் என ஓட்டுநர்களுக்கு வேண்டுகோளும் விடுத்தார்.
English Summary
Car drivers in support of farmers ..! - All India Taxi Association Action Notice