KOLNews

மாநில அரசின் கோரிக்கைளை ஏற்ற மத்திய அரசு..! - பிரதமரின் அறிவிப்புக்கு தமிழக முதல்வர் வரவேற்பு..!

நேற்று, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி , வரும் 21 ஆம் தேதியிலிருந்து குடிமக்கள் அனைவர்க்கும் கொரோனாவுக்கான தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என தெரிவித்தார்.

முன்னதாக அவரின் உரையில்,  கொரோனா தொற்றின் 2 வது அலையை எதிர்கொள்ள , விரைவாக மருத்துவ கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும்,  . ஆக்சிஜன் ,மற்றும் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டப் போதிலும் , அதனை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கொரோனாவைத் தடுக்க தடுப்பூசியே முக்கிய ஆயுதம் எனவும் அவர் தெரிவித்தார் .

அத்துடன், மூன்று புதிய தடுப்பூசிகளுக்கான சோதனைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் , மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்ட பிரதமர் மோடி  குழந்தைகளுக்காக தனி தடுப்பூசி தயாரிக்கப்படுவது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர் , தடுப்பூசி தொடர்பான மாநில அரசுகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார் . மருந்து உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து அதனை மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார் . ஜூன் 21 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தீபாவளி வரை ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார். 

இந்நிலையில், பிரதமரின் அறிவிப்பை பாராட்டியுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது  ட்விட்டர் பதிவில்  நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளில் 75 % மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்பதாகவும், கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு தங்களுடைய முந்தைய நிலைப்பாட்டை மாற்றி இருப்பதைப் பாராட்டுவதாக=வும் குறிப்பிட்டுள்ளார் . அத்துடன், பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான நிர்வாக உரிமைகளை மாநில அரசுகளுக்கு வழங்குமாறு பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்டாலின்.

English Summary

Central government to accept the demands of the state government ..! - CM of TN welcomes the announcement of the PM..!

Latest Articles

KOLNews