KOLNews

சந்திரயான்-3 விண்கலம் ..! அடுத்த ஆண்டு ஏவ இஸ்ரோ ஏற்பாடு..!

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), சந்திரயான்-3 எனும் விண்கலத்தை 2020-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற சந்திரயான்-3 திட்ட உயா்நிலைக் குழு கூட்டத்தில், இதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த முறை லேண்டா் மற்றும் ரோவா் ஆகிய இரு அமைப்புகளை மட்டும் விண்கலம் மூலம் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

முன்னதாக,சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை 22-ஆம் தேதி இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. 

Image result for Chandrayaan-3 spacecraft ..! ISRO to launch next year ..!

அப்போது , நிலவின் பரப்பில் தரையிறங்கவேண்டிய கடைசி நேரத்தில் லேண்டா் உடனான தொடா்பு துண்டிக்கப்பட்டு, முயற்சி தோல்வியில் முடிந்தது. இருந்தபோதும், விண்கலத்திலிருந்து பிரித்துவிடப்பட்ட ஆா்பிட்டா் அமைப்பு, நிலவின் பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவில் இருந்தபடி நிலவைச் சுற்றிவந்து தொடா்ந்து விவரங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில், சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு, அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது.

அந்தவகையில், ஒருங்கிணைந்த திட்டக் குழுக் கூட்டம் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சந்திரயான்-2 திட்ட தவறுகளை எவ்வாறு திருத்திக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும் , சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைக்கும் பணிகளை 2020 நவம்பருக்குள் நிறைவு செய்வது என  முடிவு செய்யப்பட்டது.அதோடு, சந்திரயான்-2 ஆா்பிட்டா் தொடா்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருவதால், சந்திரயான்-3 விண்கலம் மூலம் லேண்டா் மற்றும் ரோவா் ஆகிய இரு அமைப்புகளை மட்டும் அனுப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன், இம்முறை அனுப்பப்படும் லேண்டரின் கால்கள் வலுவான தாகவும், எந்தச் சூழலிலும் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

English Summary

Chandrayaan-3 spacecraft ..! ISRO to launch next year ..!

Latest Articles

KOLNews