KOLNews

சீண்டும் சீன ராணுவம்..! - எல்லை பகுதியில் இந்தியாவுடன் திடீர் மோதல்..!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்ததன் பின்னால் இந்தியா, சீனா இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே சிறிய அளவில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவும்  சீனாவும், லடாக் யூனியனில் உள்ள பாங்கோங் ஏரியைச் சுற்றியிருக்கும் பல பகுதிகளுக்கு உரிமை கோரி வருகின்றன. இந்நிலையில், பாங்கோங் ஏரி அருகே புதன்கிழமை காலையில் இந்திய ராணுவத்தினர் நடமாடிக் கொண்டிருந்ததை கண்ட சீன ராணுவத்தினர், அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து, இந்திய எல்லைக்குள்பட்ட பகுதியிலேயே தாங்கள் இருப்பதாக, இந்திய ராணுவத்தினர் கூறியதுடன் வெகுநேரம் அங்கேயே நடமாடிக் கொண்டிருந்தனர். இதனால்,  இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், இரு தரப்பினரும் தங்கள் முகாம்களுக்குத் திரும்பிச் சென்றனர்.'

அடுத்த மாதம் 10, 11, 12-ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும்,சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசவுள்ள நிலையில் இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையில் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சென்ற ஆண்டு, லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் குடில்கள் அமைத்ததற்கு இந்திய ராணுவத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அங்கு போர்ப்பதற்றம் நீடித்தது. தற்போது ஓராண்டுக்குப் பிறகு இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டுள்ளது..

English Summary

Chinese Army ..! - Sudden conflict with India on the border ..!

Latest Articles

KOLNews