மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை உத்தரவை உச்சு நீதிமன்றம் அறிவித்ததுடன், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவையும் அமைந்துள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில், வெள்ளி சட்டங்களுக்கு ஆதரவானவர்களே சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ளதாகவும், ஆகவே வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை பின்வாங்க முடியாது என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்து உள்ளன.
முன்னதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து 32 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து ஆலோசித்த பின், இது தொடர்பாக அவர்கள் கூறுகையில்,
"உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு, போராட்டத்தை முன் கூட்டியே முடிக்கும் திட்டம் இல்லை.வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும். மேலும்,இதுபோன்ற எந்தவொரு குழுவின் முன்னுமும் நாங்கள் ஆஜராக மாட்டோம் என்று நேற்று நாங்கள் கூறியிருந்தோம். எங்கள் போராட்டம் வழக்கம் போல் தொடரும். இந்த குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மற்றும் அரசாங்கத்தின் சட்டங்களை நியாயப்படுத்தி வந்தனர் .
இதனால், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எந்தவொரு குழுவையும் மத்தியஸ்தத்திற்காக நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறி நேற்று இரவு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டோம். சுமைகளை அவர்களின் தோள்களில் இருந்து இறக்க சுப்ரீம் கோர்ட் மூலம் ஒரு குழு அமைக்கப்படுவதாக நாங்கள் நம்புகிறோம்", என தெரிவித்தனர் ,
English Summary
Committee set up by the Supreme Court ..! - Agricultural associations not ready to believe ..!