KOLNews

தோனிக்கு ..எடப்பாடி, அமித்ஷா வாழ்த்து..!

நேற்று, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்திருந்த நிலையில், அவரது ரசிகர்கள் மட்டுமன்றி அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

 அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், " 331 சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியதற்காக, நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்பை வென்ற ஒரே கேப்டனான கேப்டன் கூல் எம்எஸ் தோனியின் பெயர் வரலாற்றில் குறிக்கப்படும். அவரது சாதனைகளும் புகழும் ஒவ்வொரு இந்தியரும் பேசப்படும்", என்று பதிவிட்டுள்ளார்.. 

 முன்னதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுடன் தானும் இணைந்து இந்திய கிரிக்கெட் காண ஒப்பிட முடியாத பங்களிப்பை தங்கத் தோணியிலே வாழ்த்துவதாக கூறியுள்ளார். பல முக்கிய போட்டிகளில் அவரது சலன படாத குணம் இந்தியாவுக்கு சாதகமாய் சாதகமானதாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் தோனி தனது தனித்தன்மையான கிரிக்கெட் மூலம் லட்சக்கணக்கானவர்களை வசியப்படுத்தி உள்ளார் அவரது எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்.. உலகம் அவரது ஹெலிகாப்டர்களை ஷாட்டுகள்  இன்றி தவிக்கும் எனக்கு ஒரு குறிப்பிட்டுள்ளார். 

English Summary

Congratulations to Dhoni .. Edappadi, Amit Shah ..!

Latest Articles

KOLNews