KOLNews

வேகமெடுக்கும் கொரானா பாதிப்பு ..? - 24 மணி நேரத்தில் 5611 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

 இன்று வரை இந்தியாவில் மொத்தம் 106750 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5611 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 140 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3303 ஆக உயர்ந்துள்ளது. 

இருப்பினும், இதுவரை 42298 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதும். நேற்று ஒரே நாளில் 3124 பேர் குணமடைந்துள்ளதும் ஒரு ஆறுதலான தகவல்.

நாட்டில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 37136 பேருக்கும், குஜராத்தில் 12140 பேருக்கும், தமிழகத்தில் 12448 பேருக்கும், டெல்லியில் 10554 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

English Summary

Corona .? - 5611 people affected in 24 hours

Latest Articles

KOLNews