KOLNews

கோரோனா கொடுமை..! மனம் வெதும்பும் ராதிகா ஆப்தே..!

கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ராதிகா ஆப்தே. பலரும் நடிக்க மறுக்கும் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று திரையில் தனது தைரியத்தை காட்டிய இந்த நடிகை, கொரோனா அவலங்களை காண சகிக்காமல் மனம் வெதும்பிவிட்டார்.

ஏற்கனவே, தனது சமூகவலை தள பதிவுகள் மூலம் கோவிட் நிவாரணம் குறித்த விழிப்புணர்வை நீண்ட காலமாக பரப்பி வருகிறார். அவர் வீட்டில் தங்கியிருந்தாலும் கூட முடிந்தவரை பலருக்கு உதவ முயன்று வருகிறார். 

அண்மையில் அவர் இட்டுள்ள பதிவு ஒன்றில்,  ” இழந்த மற்றும் இழப்பை சந்தித்துத்து அனைவருக்கும் .. உங்கள் இழப்புகளை எங்களால் பார்க்க முடியவில்லை .. அனைவருக்கும் நாம் இருக்க முடியாது அவர்களின் வலியை பகிர்ந்து கொள்ள .. அனைவருக்கும் உதவியற்றவர்களாக உணர்கிறேன்  .. இந்த அசாதாரண மற்றும் கடுமையான கொடூரமான சூழ்நிலைகளில் நாம் அனைவரும் அமைதியையும் தைரியத்தையும் உடையவர்களாக இருப்போம், துன்பப்படுபவர்களுக்கு, உங்களை ஆறுதல் படுத்த எங்களால் முடிந்தவற்றை நிறைய அனுப்புகிறோம். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என கொரோனாவால் உறவுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

English Summary

Corona cruelty ..! Radhika Apte warms the heart ..!

Latest Articles

KOLNews