மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கொரோனா தொற்றுக்கான கோவேக்சின் தடுப்பூசியின் பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இது மத்திய அரசு இதனை செயல்படுத்த முனையும் தருவாயில் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தடுப்பூசியை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம், உயிரிழப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக தீபக் மராவி (வயது42). என்கிற தன்னார்வலர்,போபாலில் உள்ள பீப்பிள்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 12-ந் தேதி நடந்த கோவேக்சின் பரிசோதனையில் பங்கேற்றிருந்தார்.
கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட அவருக்கு வீடு திரும்பியவுடன், உடல் நலக்குறைவு ஏற்பட்டதுடன், தோள்பட்டையில் வலியும் உண்டானது. அத்துடன் வாயில் இருந்து நுரை வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் டாக்டரிடம் செல்லாமல்,ஓரிருநாளில் சரியாகி விடும் என்று இருந்து உள்ளார்.
அதன் பின், தடுப்பூசி போட்டு 10 நாட்கள் ஆகியிருந்த நிலையில், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென அவரது உடல் நலம் மோசமானதையடுத்து அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கையில், வழியிலேயே உயிரிழந்து உள்ளார்.
அதையடுத்து நடத்த, பிரேத பரிசோதனையில், அவர் விஷத்தின் காரணமாக உயிரிழந்து இருக்கலாம் எனவும்,அவரது உடல் உள்ளுறுப்பு பரிசோதனை மூலமே உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், உயிரிழப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்றும், பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, உயிரிழப்புக்கு விஷத்தின் காரணமாக இதய சுவாச செயலிழப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று தெரியவருவதாகவும், . இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.
English Summary
Covaxine vaccine Volunteer died ..! - 'The reason is not the vaccine', says Bharat Biotech ..!