KOLNews

கிரிப்டோ கரன்சிகள் ஆபத்து நிறைந்தவை..! - எச்சரிக்கும் ரகுராம் ராஜன்..!

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் .ரகுராம் ராஜன், முறைப்படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகள், சீட்டு கம்பெனிகளை போல ஆபத்தானவை என தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்தே, 'கிரிப்டோ கரன்சி'  தேசமெங்கும் உள்ள பொருளாதார நிபுணர்களின் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்து ரிசர்வ் வங்கியின் மூலம் அதிகாரப்பூர்வ கிரிப்டோ கரன்சிகளை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

Cryptocurrency: Risks to your institution | Legal Blogஇதற்கிடையே, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார ஆலோசகருமான.ரகுராம் ராஜன், ஓரிரு கிரிப்டோ கரன்சிகள் மட்டுமே எதிர்காலத்தில் தாக்குப் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். அதாவது, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் சந்தையில் இருந்தாலும் பெரும்பாலானவற்றுக்கு மதிப்பே இல்லை என்றும், கிரிப்டோ சொத்துக்களை வைத்திருக்கும் பலர் பாதிக்கப்படக்‍ கூடும் என்றும் எச்சரித்துள்ளார். 

மேலும், கிரிப்டோ கரன்சியை கையாள்வதில் உள்ள பாதக தன்மையை உணர்த்தும் வகையில், முறைப்படுத்தப்படாத மற்றும் அரசு கட்டுப்பாட்டில் இல்லாத சிட் பண்டுகள் எந்த அளவிற்கு ஆபத்தானதோ, அதேபோல முறைப்படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகளும் ஆபத்தானவை என்று கூறியுள்ளார். முறைகேடான சீட்டு கம்பெனிகள் எப்படி மக்களின் பணத்தை திருடிக்கொண்டு மாயமாகிறார்களோ அதேபோல தான் கிரிப்டோ கரன்சிகளும் ஆபத்து நிறைந்தவை என்று.ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.

English Summary

Cryptocurrencies are risky ..! - Raghuram Rajan warns ..!

Latest Articles

KOLNews