KOLNews

ஜனவரி 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்கும் வகையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 2021-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை நீடிக்குமென மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கில், மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. 

இதற்கிடையே , பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால், மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, 2021-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்க்கட்டுப்பாட்டு மண்டலங்களில், கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் எனவும், சர்வதேச அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English Summary

Curfew extension with relaxations till January 31 - Federal Government announcement

Latest Articles

KOLNews