KOLNews

கொரோனாவால் திணறும் டெல்லி..! - நிலமையை சீராக்க அமித்ஷா தீவிரம்..!

சமீப நாட்களாக டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துவருகிறது. இதன் மூலம் நாட்டில் அதிகளவு கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகும் மாநிலங்களில் டெல்லி முன்னணியில் உள்ளது. 

கொரோனா பரவலின் 3-வது அலை உச்சத்தில் உள்ளதாக சொல்லப்படும் டெல்லியில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. இந்நிலையில், டெல்லியில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதையடுத்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக துணை ராணுவத்தை சேர்ந்த 45 டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் டெல்லி வரவழைக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு டெல்லி விமான நிலையம் அருகில் உள்ள கோவிட் சிறப்பு மருத்துவமனையில் கூடுதலாக 250 தீவிர சிகிச்சை படுக்கை வசதியை ஏற்படுத்தி கொடுக்கிறது.

இவை தவிர, கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக  800 படுக்கை வசதிகள் கொண்ட ரெயில் பெட்டிகளை ரெயில்வே வழங்கி உள்ளது. அவை தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டு  டெல்லியில் உள்ள சாகுர் பஸ்தி ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.

English Summary

Delhi choked by corona ..! - Amitsha serious to rectify the situation ..!

Latest Articles

KOLNews