இந்த கொரோனா பேரிடர் காலத்தில், நம் உணவில் எந்த வகையிலாவது சேர்த்துக்கொள்ள வேண்டியதில் முருங்கை கீரை முதன்மையானது. ஆமாம். அது அவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
மருந்துக்காக உண்கிறோம் என்கிற சிந்தனை இல்லாமல் அதனை ருசியோடு சமைத்து உண்ணவேண்டும். அந்த வகையில் முருங்கைக்காய் மிளகுப்பொரியல் அலாதியான சுவையுடையது.
முருங்கைக்காய் மிளகுப்பொரியல் செய்ய தேவையான பொருட்கள் ( நான்கு நபர்களுக்கு ) -
முருங்கைக்காய் 250 கிராம், உளுந்து 5 கிராம், மிளகுப்பொடி7-8 கிராம், கடுகு 2 கிராம், கறிவேப்பிலை 3 கிராம், எண்ணெய் 5 கிராம் உப்பு ருசிக்கேற்ப சேர்த்துக்கொள்ளவும்.
செய்முறை -
முருங்கைக் காயை அளவான துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும் . வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு , உளுந்து , கறிவேப்பிலை போட்டு சிவந்ததும் வேகவைத்த முருங்கைக்காய் , மிளகுப்பொடி சேர்த்து 4-5 நிமிடம் வரை கிளறி இறக்கவும் . இதில் கிடைக்கும் மொத்த கலோரி - 138 . ஒருவருக்கு கிடைக்கும் கலோரி - 34.5
English Summary
Delicious drumstick pepper fry ..!