KOLNews

காலமானார் திலீப் குமார்..! - சோகத்தில் மூழ்கிய பாலிவுட் ..!

தாதா சாஹேப் விருது பெற்ற முதுபெரும் ஹிந்தி நடிகர் திலீப்குமார்,  வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . 

ஹிந்தி உச்ச நட்சத்திரங்களான தர்மேந்திரா, அமிதாப்பச்சன் காலங்களுங்கு முந்தைய தலைமுறை நடிகரான இவர் ,1941 ல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ் , கங்கா யமுனா , ஆன் , தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்றவர் . 

இந்நிலையில் சமீப காலமாக வயது அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது . அத்துடன்  கடந்த வாரம் இவருக்கு தியரேன மூச்சுத் திணறல் ஏற்பட்டது . இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார் , இன்று காலை 7'30 மணிக்கு மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் ,காலமானார் . இவருக்கு வயது 98. 

இறப்பின் போது அவரது மனைவியான நடிகை சாய்ராபானு உடன் இருந்தார்.

நடிகர் திலீப் குமாரின் மறைவு ஹிந்தி படா ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பாலிவுட்டையே   சோகத்தில் ஆழ்த்தி உள்ளது . இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .  திலீப் குமார், மத்திய அரசின் பத்ம பூஷன் , பத்ம விபூஷன் பட்டங்களுடன்,  சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையம்  பல முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் தனது 50 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில்  65 படங்களில் நடித்துள்ளார் . 

English Summary

Dilip Kumar passes away ..! - Bollywood immersed in tragedy ..!

Latest Articles

KOLNews