KOLNews

கொரோனா விஷயத்தில் மெத்தனம் வேண்டாம் ..! - மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

கொரோனா தொற்றின் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் விழா காலம் தொடங்குவதால் மாநில அரசுகள் பாதுகாப்பு விதிமுறைகளை மெத்தனம் காட்டக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது

முன்னதாக  கொரோனா பொது முடக்க விதிமுறைகளை ஆகஸ்ட் 31 - ஆம் தேதி வரை நீட்டித்து, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறைச் செயலர் அஜய் பஹல்லா  எழுதியுள்ள கடிதத்தில் , ' பரிசோதனை , கண்காணிப்பு , சிகிச்சை , தடுப்பூசி , கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொண்டு கொரோனா தொற்றைத் தடுக்க வேண்டும் . அத்துடன் வரும் பண்டிகை நாள்களில் , கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் . பொருளாதார மீட்பு நடவடிக்கைள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தளர்வுகளை மிகக் கவனமான அறிவிக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் மனநிறைவு பெற்று விட்டதைப்போல் செயல்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

English Summary

Do not be complacent about the corona ..! - Federal government warns state governments

Latest Articles

KOLNews