KOLNews

உங்கள் குழந்தை சுயமாக சிந்திக்கிறதா..?

பொதுவாக குழந்தைகள் வளரும்போது யாரையும் சாராமல் செயல்படும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதே பெற்றோர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் அதனை சாத்தியப்படுத்துவதில் தான் பல நேரங்களில் சிக்கல் உருவாகிவிடும்.

தன்னை சுற்றி நடப்பவைகளை பார்த்து, விஷயங்களை கிரகித்து கொள்ளும் ஆற்றல் குழந்தைகளுக்கு  3 வயதிலிருந்தே ஆரம்பித்துவிடும் என்பதால், அந்த வயதிலிருந்தே சில கட்டுப்பாடுகளை மெல்ல மெல்ல விலக்கி கொள்ளவேண்டும். அதாவது அவர்கள் சுயமாக செயல்படவும்  அனுமதிப்பதுடன், அதனை கற்றுத்தரவும் வேண்டும் . 

A Mother's role in early childhood development - Healthway Medicalஉதாரணமாக, உங்கள் குழந்தை தனித்து முடிவெடுக்கும் திறனை வளர்க்க,  அதற்கான உடைகள் , விளையாட்டுப் பொருட்கள் , உணவு போன்றவற்றை தேர்வு செய்யும்போது , அதன் விருப்பத்தைக் கேட்டு செயல்பட வேண்டும் . அவர்களின் தேர்வு தவறாக இருக்கும் பட்சத்தில், அதனை மென்மையாக எடுத்துக்கூறி புரிய வைக்க வேண்டும் . இது அவர்களது முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும் . 

அதே போல  தனித்து செயல்படும்போது , குழந்தைகளின் தைரியத்தை பாராட்ட வேண்டும் . அவர்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் ,அதை நிறைவேற்ற எடுக்கும் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும் . முடிவு தோல்வியாக இருந்தாலும் , அடுத்த முறை அந்த செயலை சரியாகச் செய்யும்படி உற்சாகம் அளிக்க வேண்டும் . இதன் மூலம் குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தலாம் . 

Science says: eat with your kidsஅவர்களுக்கான நேரத்தை ஒதுக்குவதும் இதில் முக்கியமான விஷயம்.  சாப்பிடும் நேரத்தில், குழந்தை சார்ந்த பல விஷயங்களை  அதனுடன் பரிமாறிக்கொள்வதுடன் அதன் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம். பெற்றோர்களிடம் அது ஒளிவு மறைவற்ற வகையில் பழகும் தன்மை உருவாகும். 

சமயங்களில் குழந்தையிடம் தவறு ஏற்பட்டால் , அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களையே யோசிக்குமாறு செய்ய வேண்டும் . அவர்களால் , அந்த சிக்கலை சமாளிக்க முடியாத சமயங்களில் , மறைமுகமாக உதவ வேண்டும் . இதனால் அதற்கு தோல்வியால் ஏற்படும் தன்னம்பிக்கை இழப்பை தவிர்க்கமுடியும். 

English Summary

Does your child think for himself ..?

Latest Articles

KOLNews